அதிரடி வில்லனாக மாறிய ராஜூ சுந்தரம்..!

நடன இயக்குனராக அடியெடுத்து வைத்து பின் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, இயக்குனராக மாறியவர் ராஜூ சுந்தரம். நடன அசைவுகளில் பின்னி பெடலெடுக்கும் இவரது நடன இயக்கத்தில் ஆடுவது என்றாலே நடிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். கொஞ்ச நாட்களாக திரை வெளிச்சத்தை விட்டு ஒதுங்கி இருந்த ராஜூ சுந்தரம் ‘யானும் தீயவன்’ படம் மூலமாக அதிரடி வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தை பிரசாந்த் ஜி.சேகர் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்தப்படத்தில் அஸ்வின் என்கிற புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ளார். வர்ஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ஜெரோம் புஷ்பராஜ் தயாரித்துள்ளார்.

அச்சு ராஜாமணி என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இந்த விழாவில் பிரபுதேவா, ஆர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Actor Raju Sundaramஜி.சேகர்யானும் தீயவன்ராஜூ சுந்தரம்