36 விதமாக ஸ்டைல் காட்டும் ‘கபாலி’ ரஜினி சிலை..!

ஒவ்வொருவரும் ரஜினி மீதுள்ள தங்களது அன்பை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவர்.. இதில் மலேசியாவில் உள்ள ரஜினியின் நண்பர் டத்தோ மாலிக் கொஞ்சம் வித்தியாசமானவர். இவர்தான் கபாலி படத்தின் மலேசிய விநியோகஸ்தர். இவர் ரஜினிக்கு பர்சிலைக்க என்ன காரியம் செய்தார் தெரியுமா..?

கபாலி படத்தின் நினைவாக ரஜினியின் ஒண்ணேகால் அடி உயர சிலை ஒன்றை உருவாக்கி உள்ளார். ஜப்பான் நாட்டில் உருவான இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால் இந்த சிலையை 36 விதமான ரஜினி ஸ்டைல்களில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். கபாலி படத்தில் ரஜினி பயன்படுத்திய கைகாப்பு, துப்பாக்கி, கோட் ஆகியவை அப்படியே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கபாலி 2016ம் ஆண்டு வெளியாகி இருப்பதால் மொத்தம் 2016 சிலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை வந்த மாலிக் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். முதல் சிலையை பெற்றுக் கொண்டு டத்தோ மாலிக்கை வாழ்த்தினார் ரஜினி. மாலிக்கின் ஜவுளி கடையை ரஜனி மலேசியாவில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Kabail StatueKabaliKalaipuli S DhanuRajinirajinkanth