கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லாவை காப்பியடித்த ராதாரவி..!

நடிகர் சங்க தேர்தலுக்குப்பின் மீண்டும் நடிப்பில் தனது அடுத்த இன்னிங்சை துரிதப்படுத்த ஆரம்பித்துள்ளார் நடிகர் ராதாரவி. தன்னை மதித்து அழைக்கும் இயக்குனர்களின் படங்களில் தவறாது நடிக்க ஒப்புக்கொள்கிறார் ராதாரவி.. ஆச்சர்யமாக கடந்த வெள்ளியன்று ராதாரவி நடித்த ‘அரண்மனை-2’ மற்றும் ‘இறுதிச்சுற்று’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இதில் ‘இறுதிச்சுற்று’ படத்தில் ராதாரவியின் கதாபாத்திரமும் அலட்டல் இல்லாத நடிப்பும் இளம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த வெள்ளியன்று (பிப்-12) சித்தார்த்துடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘ஜில் ஜங் ஜக்’ படம் வெளியாக இருக்கிறது. படத்தில் கடத்தல் கும்பல் தலைவன் போன்ற ஒரு கேரக்டரில் ‘ரோலக்ஸ் ராவுத்தர்’ ஆக நடித்துள்ளார் ராதாரவி.

தனது 42 வருட சினிமாவில் இதுபோன்ற கேரக்டரில் நடித்தது இல்லை என ராதாரவி சிலாகித்து கூறியுள்ளார். இந்தப்படத்தில் ராதாரவியின் வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் தாடியும் இதுவரை நாம் பார்க்காத ராதாரவியை காட்டுகின்றன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லாவிடமிருந்து இந்த தாடி கெட்டப்பை காப்பியடித்ததாக ராதாரவியே பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

EtakyJil Jung JukRadharaviSiddharth