லட்டு லேட்டாக எட்டு பாடல்களுக்காவே ஹிட் ஆன ‘பார்வை ஒன்றே போதுமே’, படத்தை இயக்கிய இயக்குனர் முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் ‘மிரண்டவன்’. கதாநாயகன் சின்னத்திரை புகழ் பிரஜின். இவருக்கு அடித்தது ஜாக்பாட் என சொல்லும் வகையில் ஏழு ஹீரோயின்களுடன் நடிக்கிறார். முக்கிய கதாநாயகியாக ‘அவள் பெயர் தமிழரசி’ புகழ் மனோசித்ரா நடிக்க இவருடன் சருணா, அஞ்சு கௌடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி என இன்னும் ஆறு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
மிக முக்கியமான கதாபத்திரத்தில் ஜின்னா மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். ‘மிரண்டவன்’ சமூகத்தின் கைவிலங்காக இருக்கும் ஒரு சம்பவத்தை படம் போட்டுக்காட்டும்.. தெளிவாகவும் நேர்மையாகவும் புட்டுப் புட்டு வைக்கும் என்கிற முரளிகிருஷ்ணா, இப்படத்தில் சமீப காலமாக நடைபெறும் பிளாக் மெயில் என்ற க்ரைமை கையிலெடுத்துள்ளார்.