புதுமுகங்களுக்கு பாண்டியராஜன் தந்த ஊக்கம்..!


‘பார்வை ஒன்றே போதுமே’ பட இயக்குனர் முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ரஃபி என்பவர் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘நேர்முகம்’. இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

பாடல்கள் குறுந்தகட்டை நடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, “நேர் முகம் படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கு அப்புறம் பார்க்கப் போற விசயங்கள் தான் முக்கியம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க. நேரடியாவே நீ காலி அப்டின்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்ங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்” என படக்குழுவினரை ஊக்கப்படுத்தினார்..

JinnaMeera NanandhNamitaNermugamPandiyarajanRaffi