‘கபாலி’யை கேரளாவில் வெளியிடும் மோகன்லால்..!

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆம்… இந்திய, தமிழக சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அதாவது கலைப்புலி தாணு தயாரித்துள ‘கபாலி’யை மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் வாங்கி வெளியிடுகிறது.. மோகன்லாலின் படங்களை மட்டுமே தயாரித்தோ, அல்லது அவரது படங்களை மற்றவர்கள் தயாரித்தால் வாங்கி வெளியிட்டோ வந்த ஆசிர்வாத் நிறுவனம் ‘கபாலி’யை கைப்பற்றியுள்ளது ஆச்சர்யம் அல்லாமல் வேறு என்ன..

இதற்குமுன் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தையும் கேரளாவில் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், மோகன்லாலும் நடித்த படம் என்பதால் மட்டுமே அதை வாங்கி வெளியிட்டது இந்த நிறுவனம். இதுநாள்வரை கேரளாவில் 150 திரையரங்குகளில் ‘கபாலி’ வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்தப்படத்தை மோகன்லால் வாங்கியிருப்பதால் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றே தெரிகிறது. இதற்குமுன் தாணு தயாரிப்பில் வெளியான விஜய் நடித்த ‘தெறி’ படத்தை மோகன்லாலின் நண்பரும் சிஷ்யருமான விஜய்பாபு தனது பிரைடே பிளிம்ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 5.6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

KabaliMohanlalRajiniகபாலிமோகன்லால்ரஜினி