‘பாபநாசம்’ இயக்குனர் மூலம் மோகன்லால் மகன் கதாநாயகன் ஆகிறார்..!

வாரிசுகள் நடிகர்களாக களம் இறங்குவதற்கு மொழி பேதமெல்லாம் எதுவும் இல்லை. அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில் உட்பட பலர் கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள்.. ஆனால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது, ‘ஆதி’ என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘த்ரிஷ்யம் என்கிற ஹிட் கொடுத்ததோடு, அதேபடத்தை தமிழில் கமலை வித்தை ‘பாபநாசம்’ என்கிற பெயரில் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் மோகன்லால் மகனை அறிமுகப்படுத்துகிறார். இவரிடம் உதவி இயக்குனர்களாக மூன்று வருடங்கள் பிரணவ் வேலை பார்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Lalஜீத்து ஜோசப்த்ரிஷ்யம்மோகன்லால்