இல்லை இல்லை என்று சொன்ன இயக்குனர் ராம் இப்போது போஸ்டர் மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார் தனது படத்தில் மம்முட்டி நடிப்பதை. கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்ப்பக்கம் வராமல் மலையாளத்திலேயே மையம் கொண்டு அமர்ந்துவிட்டார் மம்முட்டி. ஆனால் இப்போது சந்தோசமான செய்தி என்னவென்றால் மீண்டும் தமிழில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி..
‘தங்க மீன்கள்’ மூலம் மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இயக்குனர் ராம் தற்போது இயக்கியுள்ள ‘தரமணி’ படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கவுள்ள ‘பேரன்பு’ படத்தில் தான் மம்முட்டி நடிக்கிறார். கதையும் மம்முட்டி தான் நடிக்கவேண்டும் என்று கேட்கிறதாம். மம்முட்டிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா தான் இந்தப்படத்தின் ‘ஆனந்த யாழை’ மீட்டப்போகிறவர். வரும் ஜன-6ல் கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.