குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது சரித்திர நிகழ்வு.. சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக ரித்திகா சிங்கும் பாக்ஸிங் கோச்சாக மாதவனும் ஆடுகளத்தை கண்முன் நிறுத்தினார்கள்.. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் புகழ்பெற்ற இந்தப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டது..
அந்தவகையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் 29வது டோக்கியோ திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது இறுதிச்சுற்று.. வரும் அக்-31, நவ-1 & 2 ஆம் தேதி என மொத்தம் மூன்று நாட்கள் தொடர்ந்து இந்தப்படத்தை திரையிட உள்ளார்கள்.