லாரன்ஸின் புதிய படம் ‘பைரவா’..!


காஞ்சனா – 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என இரண்டு படங்களை இயக்குவதா அறிவித்தார்.. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பு விழாவில் தான் ‘வேந்தர் மூவிஸ்’ தனக்கு முன்பணமாக மேடையில் வழங்கிய ஒரு கோடி ரூபாயை, அப்படியே தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் குடும்பங்களுக்கு செலவழிக்கப் போவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.

இதற்கிடையே தனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டதால். அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு “ பைரவா “ என்று பெயர் சூட்டி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை வருகிற பொங்கலன்று வெளியிட இருக்கிறார்கள்.

BairavaLawrenceMotta Siva Ketta SivaSuper Good Films