பிறந்தநாளில் சோஷியல் மீடியாவில் அடியெடுத்து வைக்கிறார் லாரன்ஸ்..!


சினிமாவை தவிர்த்து பார்த்தால், நடிகர் லாரன்ஸின் உலகம் குழந்தைகள் சூழ்ந்ததாகத்தான் இருக்கும்.. அதனால் தான் தனது பிறந்த நாளைகூட தான் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் சேர்ந்து நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட இருக்கிறார் லாரன்ஸ்.
இதுவரை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் ஒதுங்கியே இருந்தார் லாரன்ஸ்.. நாளை தனது பிறந்த நாளையொட்டி டுவிட்டர், பேஸ்புக் இரண்டிலும் தனது புதிய கணக்கை துவங்குகிறார்.. இதன்மூலமாக அவரது அறக்கட்டளை மற்றும் அவரது படங்கள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

Actor LawrenceRagavendirarSocial Media