கிருஷ்ணாவின் புதிய குரலாக ஒலிக்கப்போகும் ‘திரு.குரல்’..!


தற்போது ‘தீதும் நன்றும்’ என்கிற படத்தை தயாரித்துவரும் சார்லஸ் இம்மானுவேல் அடுத்ததாக தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘திரு.குரல்’. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின்படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் துவங்குகிறது. இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

KrishnaPrabhuSam C.SThiru Kuralகிருஷ்ணாசாம் சி.எஸ்திரு குரல்பிரபு