பிரபுசாலமன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘தொடரி’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் பேசிமுடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் தனுஷ்.. அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் தான் நடித்துள்ள ‘யாக்கை’ படத்தின் டப்பிங்கை ஒரேநாளில் பேசி அசத்தியுள்ளார்.
‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். சுவாதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கும் தனுஷுக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது. ஆம். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.