உயிரைக்கொடுத்து ஓடிய கருணாகரன் ; கட் பண்ணி தூக்கிய கார்த்திக் சுப்புராஜ்..!

நாளை கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ‘இறைவி’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடன் கருணாகரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர்கள் மூவருடனும் கூடவே வரும் கேரக்டர் கருணாகரனுக்கு. இதில் பூட்டுகளை திறக்கும் எக்ஸ்பெர்ட்டாக நடித்துள்ளார் கருணாகரன்..

ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ஒருநாள் கோவில் அருகே படப்பிடிப்பு நடத்தினார்களாம்.. மாலை இருட்டுகிற நேரம் என்பதால் பாம்புகள் தொல்லை இருப்பதாக அந்தப்பகுதியினர் சொன்னார்களாம். கருணாகரன் கோவிலைச்சுற்றி மூன்றுமுறை ஓடவேண்டியது தான் பாக்கி.

கார்த்திக் சுப்புராஜ் ஆக்சன் என்று சொன்னதும் அந்த இருட்டுப்பகுதியில் கோவிலைச்சுற்றி பாம்புகள் இருக்குமோ என்கிற பயத்தில் உயிரை கையில் பிடித்தபடி கட் சொன்னபிறகும் சுற்றிவந்தாராம். கருணாகரன். கடைசியில் டப்பிங்கின்போது பார்த்தால் அந்த காட்சியே இடம்பெறவில்லையாம். கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டதற்கு படத்திற்கு தேவையில்லை அதனால் தூக்கிவிட்டோம் என்றாராம் கூலாக.

Bobby SimhaKarthick SubburajKarunakaranS J SuryaVijay Sethupathi