அண்ணன் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தேவ் என்பது சூர்யாவின் மகன் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில். ‘சிங்கம் -2’, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது .

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ளது.. ஆக்சன் , காமெடி, அட்வென்ஜர் கலந்து உருவாகும் நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Actor KarthiamruthaDevPrakash Rajஅம்ருதாஅர்திகார்த்திதேவ்பிரகாஷ் ராஜ்ரகுல் ப்ரீத் சிங்ரம்யா கிருஷ்ணன்ரவிவம்சி ரவிவிக்னேஷ்ஹாரிஸ் ஜெயராஜ்