நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது இருக்கட்டும்.. கடந்த மாதம் வரை நடிகர் சங்க கடன் பூதாகரமாக சங்க உறுப்பினர்களை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஆனால் நட்சத்திர கிரிகெட்டை நடத்தி அதன்மூலம் கிடைத்த வருவாயில் சங்க கடனையும் அடைத்து கையிருப்பாக 8 கோடி ரூபாயையும் காட்டியுள்ளனர் விஷால் அணியினர்..
நேற்று முன் தினம் தொழிலாளார் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி)சார்பில் சிறப்பு மேதின விழா கொண்டாடப்பட்டது. இதில் கமல், விஷால், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.. இந்த விழாவில் பேசிய கமல் விஷால் குழுவினர் நடிகர்சங்க கடனை அடைத்தது குறித்து பாராட்டி பேசினார்..
“நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள். எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என விஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள். நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை” என புகழாரம் சூட்டினார் கமல்.