கலாபவன் மணி நடித்த கடைசி தமிழ்ப்படம் ஜூலை-7ல் ரிலீஸ்..!


மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக ஏதோ ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் நன்கு பதிந்தவர். ஆனால் காலன் அவரை சீக்கிரமே இவுலகைவிட்டு அழைத்துக்கொண்டான். கலாபவன் மணி இறந்து சுமார் நான்கு மாதங்களாகி விட்டது. அவரது மரணம் இயற்கையானது அல்ல என தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும், அதற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க கலாபவன் மணி இறப்பதற்கு முன் மலையாளத்தில் அவர் நடித்து முடித்த படங்கள் கடந்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாகின. இப்போது தமிழில் அவர் நடித்துள்ள ‘புதுசா நான் பொறந்தேன்’ என்கிற படம் வரும் ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தென்காசி பட்டிணம் படத்தில் சின்ன வயது சரத்குமாராக நடித்த பியோன் என்பவர்தான் இந்தப்பத்தின் ஹீரோ. இவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட நாற்பது படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு மலையாளப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக கல்யாணி நாயர் நடித்திருக்கிறார்.

கலாபவன் மணி பற்றி இந்தப்படத்தின் இயக்குனர் மஜீத் அபு கூறும்போது, ” கலாபவன் மணி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளை கொடைக்கானலில் படமாக்கிய போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் நாங்கள் வேறொரு நாளில் படைபிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம் ஆனால் அவர் வேண்டாம் இப்போதே நடிக்கிறேன் என்று கூறினார். நாங்கள் புது யூனிட்டாக இருந்தும் கூட அவர் எங்களுக்கு அந்த சூழ்நிலையிலும் மறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம். அப்படிப்பட்ட ஒரு நல்ல கலைஞன் பிரிந்து சென்றது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது ..அவர் கடைசியாக நடித்தது எங்கள் படம் தான்… வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் போது அவர் இல்லாதது எங்க யூனிட்டுக்கு ரொம்ப வருத்தம் அளிக்கிறது” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

Kalabavan ManiPudhusa Nan Poranthenகலாபவன் மணிபுதுசா நான் பொறந்தேன்