அது என்னவோ தெரியவில்லை ஒற்றை எழுத்து டைட்டில் வைப்பது ஜீவாவுக்கு செண்டிமெண்டாக வெற்றியையே கொடுத்து வருகிறது.. ‘ஈ’, ‘கோ’ என அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அந்தவகையில் அடுத்ததாக ‘கீ’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி.
இப்படத்தை செல்வராகவனின் உதவியாளர் கைலாஷ் இயக்க இருக்கிறார். காமெடி மற்றும் டெக்னாலஜி கலந்த படமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள். ஜீவா தற்போது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து ‘கீ’ படத்தில் நடிக்க இருக்கிறார் நிக்கி கல்ராணி தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.