ஒரு சிறந்த நடிகராக, வெற்றிகரமான தயாரிப்பாளராக, பாடலாசிரியராக அடிக்கடி தனது அவதாரங்களை மாற்றிக்கொண்டு பிரமிப்பூட்டி வந்த தனுஷிடம், நீங்கள் ஒரு படத்தை டைரக்ட் பண்ணுவது எப்போது என அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. குறிப்பாக அவரது மனைவி ஐஸ்வர்யா டைரக்சன் துறைக்குள் வந்ததுமே இந்த கேள்வியை அடிக்கடி எதிர்கொண்டார் தனுஷ்.
ஆனால் அதற்காக இப்படி திடுதிப்பென்று தனது முதல் பட டைரக்சன் அறிவிப்பை வெளியிடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.. ஆம்.. தனது டைரக்சனில் உருவாகும் முதல் படத்துக்கு ‘பவர்பாண்டி’ என பெயரிட்டு அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் இன்று காலை வெளியிட்டுள்ளார் தனுஷ்.. படத்தையும் அவரே தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் கதாநாயகன் பிரசன்னா என்றாலும் போஸ்டரில் ராஜ்கிரண் படு கம்பீரமாக நிற்பதையும் அவருடன் நான்கைந்து பெரிசுகள் அணிவகுத்து நிற்பதையும் பார்த்தால் ‘பவர் பாண்டி’ யார் என்பது நமக்கே புரியும்.. படத்தின் இசை அவரது ஆஸ்தான அனிருத் இல்லை என்பதும் ஆச்சர்யம். ஷான் ரோல்டன் தான் இசையமைக்கிறார்.
ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் படம் தயாரிப்பு, டைரக்சனில் முதல் அடி என தொடர்ந்து ஆச்சர்யங்களாக தந்துகொண்டு இருக்கிறார் தனுஷ்.