பரத்துக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சுங்கோ..!


தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுக்க நிதானமும் மிகுந்த கவனமும் காட்டிவந்தார் பரத். அதற்கேற்ற மாதிரி இப்போது ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ என்கிற வித்தியாசமான டைட்டிலுடன் அருமையான படம் ஒன்று அவருக்கு அமைந்துள்ளது.
கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை புதுமுகம் எல்.ஜி.ரவிச்சந்தர் என்பவர் இயக்குகிறார். பரத்திற்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ‘சூதுகவ்வும்’ கருணா, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்,. யுகபாரதி மற்றும் கானா பாலாவின் பாடல்களுக்கு சைமன் என்பவர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தப்படத்தில் “நல்லநேரம் ஸ்டார்ட் ஆகிருச்சுன்னா அத யாராலயும் தடுக்க முடியாது. இப்ப எனக்கு ஸ்டார்ட் ஆகிருச்சு” என பரத் பேசுவதுபோல பஞ்ச் டயலாக் இருக்கிறதாம். கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிப்பதை பார்க்கும்போது அது வெறும் பஞ்ச்சாக மட்டும் இல்லாமல் உண்மையாகும் என்றே தோன்றுகிறது.

Aindhaam Thalaimurai Sidha Vaidhiya SigamaniBarathNandithaSoodhu Kavvum KarunaThambi Ramaiah