ஆனந்தராஜ் நடிக்கும் படங்களை நன்றாக கவனித்து பார்த்தவர்களுக்கு மட்டும் அவருக்குள் உள்ள நகைச்சுவை கலைஞனை நன்றாகவே அறிந்துகொள்ள முடியும். சில படங்களில் கொஞ்சமாக வெளிப்பட்ட அந்த நகைச்சுவை உணர்வை ‘நானும் ரவுடி தான்’ படம் மூலம் பளிச்சென வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. அந்த பத்துநிமிட தொடர் காமெடி சான்ஸே இல்லை..
விஜய்சேதுபதியுடன் கூட்டணி போட்ட ஆனந்தராஜ், இப்போது அடுத்ததாக பாபிசிம்ஹாவுடன் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.. நேற்று திடீரென ஆனந்தராஜுக்கு உடல் நலக்குறைவு என ஒரு வதந்தி பரவ, இன்று ‘வல்லவனுக்கு வல்லவன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு பரவிய வதந்தியை உடைத்தெறிந்து தான் நலமாக இருப்பதை உணர்த்தினார்.