அஜித்திடமிருந்து வெளியான எச்சரிக்கை..!

ரஜினியின் ரசிகர் மன்றங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. கமல் பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிவிட்டார்.. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக அஜித் தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்து உத்தரவிட்டார்.. ஆனாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் கூடவே செய்கிறது.

அதேபோல அஜித் ரசிகர்கள், மன்றங்கள் என சொல்லிக்கொண்டு இணையதளம் மற்றும் பொது வெளிகளில் அஜித்தின் பெயரையும், புகைப்படத்தையும் சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்துவது மற்றும், அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும் என விஷமிகளை எச்சரிக்கும் விதமாக அஜித் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

‘விவேகம்’AjithVivegamஅஜித்தல அஜித்