புதியவர்களுக்கு அறிமுகம் கொடுக்க தயாராகும் ‘ஆரிமுகம்’..!


நெடுஞ்சாலை’ படம் மூலம் கவனம் ஈர்க்கத்தக்க நடிகராக மாறிய ஆரி, அதன்பின், மாயா, உன்னோடு கா’ படங்களின் மூலம் மினிமம் கியாரண்டி உள்ள படங்களின் நம்பிக்கை நாயகனாகவும் மாறியுள்ளார். இந்தநிலையில் படம் இயக்க துடிக்கும் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தன்னால் முடிந்த உதவியை ‘ஆரிமுகம்’ என்கிற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதன்மூலம் இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள இயக்குனர்களில் நல்ல திறமையான நபர்களை கண்டறிந்து, அவர்கள் படம் இயக்குவதற்கு உதவும் விதமாக 20 நிமிட குறும்படங்களை எடுப்பதற்கான உதவிகளை செய்ய இருக்கிறார் ஆரி. இவற்றில் தேர்வாகும் முதல் நபருக்கு படம் இயக்கும் முதல் வாய்ப்பு வழங்கப்படுமாம்.

AariAari mugamஆரிஆரிமுகம்