ஆக்சன் பேக்கேஜாக ‘கதகளி’ ட்ரெய்லர் ; ஆச்சர்யப்பட வைத்த பாண்டிராஜ்..!

குழந்தைகளை வைத்து அற்புதமாக படம் பண்ணுவார் பாண்டிராஜ். அது நமக்கு தெரியும்.. காமெடியான படங்களையும் தருவார்.. மெரினா, கேடி பில்லா ஆகிய படங்களையும் பார்த்திருக்கிறோமே.. அப்படிப்பட்டவர் ஆக்சன் ஏரியாவில் கால் வைத்து அதகளப்படுத்துவார் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்புவது சிரமம் தான் ஆனால் நேற்று வெளியான விஷாலின் ‘கதைகளை’ படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் பிரமித்து போயுள்ளனர்..

விஷாலின் படங்கள் என்றாலே ஆக்சன் தெறிக்கும்.. பாண்டிராஜின் டைரக்சனில் உருவாகியுள்ள இந்த ‘கதகளி’ படமும் நகரப்பின்னணியில் பக்கா ஆக்சன் விருந்தாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.. இதில் பாண்டியராஜின் இன்னொரு முகம் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.

ActionKathakaliKathakali TrailorPandirajVishalVishal Film FActory