மில்லியன் டாலர் ஊழலை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய இர்பான்..!

பக்கத்து வீட்டு பையன் கேரக்டர் என்று சொல்லிச்சொல்லியே இர்பானுக்கு கதை சொல்லவரும் இயக்குனர்கள் இதுவரை அவரை மேலே ஏறவே விடவில்லை. அதனால் தனக்காக கதை பண்ணிக்கொண்டு வரும் இயக்குனர்களை விட, தன்னை கதையில் புகுத்தும் இயக்குனரை தேடிய இர்பானுக்கு, அப்படி வரமாக கிடைத்த ஒரு இயக்குனர் தான் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.

இவர்கள் இணைந்துள்ள படத்தின் பெயர் ‘ஆகம்’. இது வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான உழலை பற்றிய படமாம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதையை பல வருட ஆய்வுக்குப்பின் தான் எழுதியுள்ளார் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.

இந்தப்படத்தில் இர்பானுக்கு ஜோடியாக அறிமுக நாயகி தீக்சிதா நடிக்க, ஜெயபிரகாஷ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதுவும் தவிர பிரெஞ்ச் நடிகை அலியோனா முண்டேனு என்பவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Aagamஅலியோனா முண்டேனுஆகம்இர்பான்ஜெயபிரகாஷ்ரியாஸ் கான்