‘ஒரு சிறகு போதும்’ என்ற நூலை எழுதியவரும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தியவருமான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் என்பவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஆகம்’. இது அவரது இன்னொரு நூலான ‘உன்னை உணர்’ என்கிற கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இர்ஃபான், தீக்ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி. மகேந்திரன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இந்தியாவின் அறிவை அன்னிய நாடுகள் சுரண்டும் அறிவுத் தீவிரவாதம் பற்றி பேசும் படம் என்கிற இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பரமக்குடியை சேர்ந்தவராம். “பரமக்குடியில் உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் என் தாத்தா, அப்பா எல்லாரும் வாழ்ந்தனர்” என பெருமையாக் சொல்கிறார்.
வெளிநாடு சென்று வாழ்வதுதான் வாழ்க்கை என நினைக்கும் ஒரு அண்ணன். அதேசமயம் தான் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று நினைக்கின்ற தம்பி.. இவர்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்னை, எப்படி ஒரு நாட்டின் பிரச்சனையானது என்பதுதான் இந்தப்படத்தின் கதை..