அபாய கட்டத்தில் ‘ஆடுகளம்’ எடிட்டர்..!

ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் கிஷோர்.. மிரட்டிய ‘ஈரம்’, ‘காஞ்சனா’, பாலாவின் ‘பரதேசி’ உட்பட பல படங்களில் தனது படத்தொகுப்பால் விறுவிறுப்பை கூட்டியவர். தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங்கில் தீவிரமாக இருந்த கிஷோர், கடந்த வெள்ளிக்கிழமை எடிட்டிங் அறையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக வெற்றிமாறனும் மற்றவர்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்திருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அதை ஆபரேஷன் மூலம் சரி செய்துள்ளார்கள்.

ஆனாலும் இன்னும் நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே இருக்கிறாராம் கிஷோர். டாக்டர்கள் அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஆலோசனை செய்து வருகிறார்களாம். அவர் நல்லபடியாக தேறி, மீண்டெழுந்து வர இறைவனை பிரார்த்திப்போம்..

ஆடுகளம்ஈரம்’எடிட்டர் கிஷோர்காஞ்சனாபரதேசிவிசாரணைவெற்றிமாறன்