வாக்குப்பதிவு விழிப்புணர்வுக்காக ‘முத்திரை முகாம்’ நடத்தினார் ஆதி

Let’s Bridge என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் ஆதி. இந்த அமைப்பின் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவுசெய்துள்ளார் ஆதி. இதன் முதற்கட்டமாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு விழிப்புணர்வுக்காக ‘முத்திரை முகாம்’ நடத்தியுள்ளார்.

இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் “நம் எதிர்காலம் உங்கள் கையில் – சிந்தித்து வாக்களிப்பீர்” என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதிப்பார்கள். இதற்கு சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களும் ஆதரவளித்துள்ளார்கள்.

AadhiNasserSathyarajVijay Sethupathyஆதிசத்யராஜ்நாசர்விஜய் சேதுபதி