உலக பிரபலமான கால்பந்தாட்ட வீரர் பீலே-வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகின்றது. இந்த படத்துக்கு தற்போது, இசையமைத்து வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வட அமெரிக்க இசைப்பயணத்தின் போது அங்குள்ள 13 முக்கிய பெருநகரங்களில் ‘ஏ.ஆர்.ரஹ்மான்-ஒரு நெருக்கமான இசைப்பயணம்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
வரும் மார்ச் 21ஆம் தேதியில் இருந்து ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த இசைப்பயணத்தில் வட அமெரிக்காவில் சுமார் 4 மாதகாலம் (86 நாட்கள்) தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். ‘ரோஜா’வில் தொடங்கி இந்த 2௦ ஆண்டுகளாக அவர் இசையமைத்துள்ள சுமார் 100 திரைப்படங்களின் சிறந்த பாடல்கள் மற்றும் தனி இசைக்கோர்வை போன்றவை இந்த நிகழ்ச்சிகளின் போது இசைக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை மார்ச்-6ஆம் தேதி தொடங்கும். வி.ஐ.பி. பேக்கேஜ் டிக்கெட் விற்பனை மார்ச்-4 வரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான், வட அமெரிக்காவில் இதேபோல் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.