‘ஸ்லம் டாக் மில்லியனர்’ மற்றும் ‘127 ஹவர்ஸ்’ என இரு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது மூன்றாவதாக ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் இந்தப்படத்தை கிரெய்க் கில்லஸ்பி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏழு பாடல்களுக்கு மட்டும் புதிதாக இசையமைத்துள்ள ரஹ்மான், மீதி ஏழு பாடல்களுக்கு தான் ஏற்கனவே 90களில் இசையமைத்து ஹிட்டான பாடல்களின் இசையை பயன்படுத்தியுள்ளார். இந்தப்படம் இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை( மே-9) ரிலீஸாக இருக்கிறது.