கல்விக்காக ஒரு மாரத்தான் போட்டி…!

 

காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம்.. இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்…. இந்த கருத்தை மையமாக வைத்து வஜ்ரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.. இக்கருத்து அனைத்து மக்களிடம் சேரவேண்டும் என்ற நோக்கில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைத்து மாரத்தான் போட்டி நடத்த இருக்கிறார்கள்..

இந்த மாரத்தான் போட்டி குழந்தைகள் தினமான வரும் நவம்பர் 14-ம் தேதி காலை 6.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கல்வியின் அவசியமும், முக்கியத்துவமும் போய் சேரும் என்பது படக்குழுவினரின் நோக்கம்.

இந்தப்படத்தில் பசங்க, கோலிசோடா  வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானிரெட்டி  என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் செல்வன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

கிஷோர்குட்டி மணிகோலிசோடாஜெயபிரகாஷ்தம்பிராமையாபசங்கபவானிரெட்டிபாண்டிரமேஷ் செல்வன்வஜ்ரம்ஸ்ரீராம்