“ஹீரோவான பின்புதான் நல்ல பாடல்களை கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்” – இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டார்லிங் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றிக்கு குறிவைத்து, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் தான் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, சிம்ரனும் பிரியா ஆனந்தும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.. ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

விழாவில் கலைப்புலி தாணு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய், பார்த்திபன், நா.முத்துக்குமார், ஞானவேல் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் விஜய், “நடிக்க ஆரம்பித்து விட்டதால் இசையமைப்பு வேலையையும் இவரால் சரியாக கவனிக்க முடியுமா என நினைத்தேன். ஆனால் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் முன்பைவிட சூப்பரான பாடல்களை தருகிறார் ஜி.வி.பிரகாஷ்” என அவரை வாழ்த்தி பேசினார்.

இதைவிட ஆச்சர்யமான ஒன்று என்னவென்றால் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோ சி.ஜெயக்குமார் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை மிகவும் கேடுகெட்ட கேவலமான கதை. இந்த கதையை இயக்குனர் பலரிடம் சொல்லி, அவர்கள் நிராகரித்து விட்டனர். நான் கூட ரொம்ப யோசனைக்குப்பிறகு தான் இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்தேன்“ என்று கூறினார்.. அப்படிப்பட்ட கேவலமான கதையை தயாரிக்கவும் ஒரு காரணம் இருக்கும் தானே.. படம் வந்தால் தெரிந்துவிட்டு போகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன்ஏ.ஆர்.முருகதாஸ்ஏ.எல்.விஜய்கயல் ஆனந்திகலைப்புலி தாணுகாஸ்மோ சி.ஜெயக்குமார்சிம்ரன்ஜி.வி.பிரகாஷ்ஞானவேல் ராஜாத்ரிஷா இல்லேன்னா நயன்தாராநா.முத்துக்குமார்பார்த்திபன்பிரியா ஆனந்த்மனிஷா யாதவ்