சிபிராஜ் – சத்யராஜ் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு படத்திற்கு வெளியே நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தப்படத்தின் இயக்குனர் தரணீதரன் படத்தை 35 நாட்களிலேயே சொன்னபடி எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படம் தற்போது போஸ்ட் புரொடக்சன் லெவலில் இருக்கும்போதே சாட்டிலைட் ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்றுள்ளது.
ரிலீஸ் தொடர்பான பணிகள் துரிதமாக நடந்துகொண்டு இருக்கும் இந்த நிலையில் ‘ஜாக்சன் துரை’ படத்தின் போஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். இதில் என்ன சிறப்பு என்றால் படத்தில் கதாநாயகனாக சிபிராஜ் இருந்தும், முக்கியமான வேடத்தில் சத்யராஜ் இருந்தும் போஸ்டரில் ‘மொட்ட’ ராஜேந்திரன் படத்தை போட்டு வெளியிட்டிருப்பது தான். இது நிச்சயமாக சிபிராஜ் மற்றும் சத்யராஜின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது.