‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? விக்ரமிற்கு அடுத்ததாக மொத்த படத்தையும் தூக்கி சுமந்தது அவர்தானே.. அதனால்தானோ என்னவோ சாராவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து ‘சைவம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார் இயக்குனர் விஜய்.
“சைவம் முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். சொல்லப்போனால் நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது. நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை” என ஒரு புது உலகத்துக்கு நம்மை அழைத்துச்செல்ல இருக்கிறார் இயக்குனர் விஜய்.
அனேகமாக இயக்குனர் விஜய், இந்தப்படத்தின் மூலம் விருதுகளை அள்ளுவார் என தெரிகிறது. நாசரின் பேரனாக நடிக்க ஓர் இளைஞனை தேடியபோது நாசரின் மகன் லுப்துபுதீன் கண்ணில் படவே, அவரையே ஒப்பந்தம் செய்து ‘பாஷா’ என பெயரும் வைத்துவிட்டார் இயக்குனர் விஜய். படத்திற்கு இசையமைத்திருப்பது அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தான்.
“ஜீ. வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இருவரும் என்னுள் இணைந்த, என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். ஒரு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும்போதே அடுத்த படத்தை பற்றி நாங்கள் விவாதிக்க தொடங்குவோம். அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம். ‘சைவம்’ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும்” என்கிறார் இயக்குனர் விஜய்.
508188 497580hey I was very impressed with the setup you used with this weblog. I use blogs my self so good job. definatly adding to bookmarks. 238793