அறிமுக இயக்குனர் வி.ஆர்.கௌதம் இயக்கத்தில் பி.வாசுவின் மகன் சக்தி கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள படம் 7 நாட்கள். சக்திக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்று அங்கனா ராய் நடிக்கின்றனர் கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரபு, நாசர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராஜீவ் கோவிந்தபிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை நேற்று தனுஷ் அவர்கள் வெளியிட்டார்.
இப்படத்தின் ஒரு பாடலான, புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு மதன் கார்க்கிவரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில். நேற்று இப்படத்திற்கான இசையை நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தை வருகின்ற மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.