72 மணி நேர தொடர் படப்பிடிப்பு ; பூதமாக முனீஸ்காந்த் நடிக்கும் ‘ஆலம்பனா’


தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அந்தவகையில் ‘ஆலம்பனா’ படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சொல்லப்போனால் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு கதை அம்சத்தில் ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது என்று கூட சொல்லலாம்..

பேண்டஸி கான்செப்ட்டில் உருவாகும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்..

இதில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இந்தப்படம் பற்றி இயக்குநர் பாரி கே.விஜய் கூறும்போது, “போஸ்டரிலேயே இது எந்த மாதிரியான கதைக்களம் என்பதைத் தெரிவித்துள்ளோம். பூதத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். நாயகனாக வைபவ் சாரும், பூதமாக முனீஸ்காந்த் சாரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதைப்படி சில காட்சிகளைப் படமாக்குவது கடினம். இப்போது சொல்வதைவிட, படமாகப் பார்க்கும்போது அதை உணர்வீர்கள். ஒரு சண்டைக் காட்சியை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம்.

அதே போல் 72 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றது. இடையே ஒரு சின்ன இடைவெளி மட்டும் விட்டு, தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளன. வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம்” என்கிறார்.

AalambanaActor Vaibhav Next Movie Pooja PhotosBari k vijayKaali VenkatMuneeskanthParvathy Nairஆனந்த்ராஜ்கபீர்துபான் சிங்காளி வெங்கட்திண்டுக்கல் ஐ.லியோனிபார்வதி நாயர்முனிஷ்காந்த்முரளி சர்மாவைபவ்