தென்னிந்திய சினிமாவுக்கான 64வது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை மாதவனும் சூர்யாவும் சிறந்த நடிகைக்கான விருதை ரித்திகா சிங்கும் பெற்றுள்ளனர்.. தமிழ் சினிமாவில் மேலும் பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்கள் விபரம் வருமாறு..
சிறந்த நடிகர் : மாதவன் (இறுதிச் சுற்று), சூர்யா (24).
சிறந்த நடிகை : ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
சிறந்த இயக்குனர் : தமிழ் – சுதா கே பிரசாத் (இறுதிச் சுற்று)
சிறந்த திரைப்படம் : ஜோக்கர்
சிறந்த அறிமுக நடிகர் : சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த அறிமுக நடிகை : மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த துணை நடிகர் : சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை : தன்ஷிகா (கபாலி)
சிறந்த இசை ஆல்பம் : ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பின்னணிப் பாடகர் : சுந்தர் அய்யர் (ஜோக்கர்- ஜாஸ்மினு பாடல்)
சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்வேதா மேனன் (கபாலி – மாயநதி பாடல்)
சிறந்த ஒளிப்பதிவு : திரு (24)
சிறந்த பாடலாசிரியர் : தாமரை (அச்சம் என்பது மடமையடா – தள்ளிப் போகாதே பாடல்)
வாழ்நாள் சாதனையாளர் விருது: டாக்டர்.விஜய நிர்மலா
சிறந்த நட்சத்திரம் (விமர்சகர்) விருது : தமிழ் – சூர்யா (24), த்ரிஷா (கொடி)