சசி இயக்கிய ‘555’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக.. ஸாரி.. வில்லியாக நடித்தவர் எரிக்கா பெர்னாண்டஸ்.. இவர் அறிமுகமானது தமிழ்தான் என்றாலும் கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் ‘விழித்திரு’ படத்திலும் மற்றும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் நடித்துவரும் எரிக்கா, தற்போது தேவையில்லாமல் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்..
விஷயம் இதுதான்.. கடந்த வருடம் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது, கன்னட அணியான ‘கர்நாடக புல்டோசர்’ பக்கம் சேர்ந்துகொண்டு, அந்த அணி விளையாடும் போட்டிகளில் பங்கேற்று உற்சாகப்படுத்தினார்.. ஆனால் இந்தமுறை கன்னடத்துக்கு டாட்டா காட்டிவிட்டு, ஆந்திராவின் ‘தெலுகு வாரியர்ஸ்’ அணியை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதுதான் கன்னட ரசிகர்களின் கோபத்துக்கு காரணம்.
இதை கேள்விப்பட்ட எரிக்கா, உடனே தனது சமூக வலைதள பக்க்கத்தில், “நான் எல்லா மொழிகளிலும் பாகுபாடின்றி நடிக்கும் ஒரு நடிகை. கடந்தமுறை கன்னட அணியை உற்சாகப்படுத்தினேன், இந்தமுறை ஆந்திர அணியை உற்சாகப்படுத்துகிறேன்.. அடுத்த வருடம் இன்னொரு அணி.. அவ்வளவுதானே தவிர, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை… ஆனால் தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என உருகியிருக்கிறார் எரிக்கா..