தமிழுக்கு 5 தேசிய விருதுகள்..!


61வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்சினிமா ஐந்து விருதுகளை தட்டிக்கொண்டு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான ‘தங்கமீன்கள்’ படத்திற்கு மட்டும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன..

சிறந்த தமிழ்ப்படமாக ஒரு விருதும் சிறந்த பாடலாசிரியர்க்காக நா.முத்துக்குமாருக்கும் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக பேபி சாதனவுக்கும் என மொத்தம் மூன்று விருதுகளை கைப்பற்றியுள்ளது.

இதுதவிர மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் பட்த்திற்கும் ‘வல்லினம்’ படத்திற்கு சிறந்த படத்தொகுப்பிற்காக சாபு ஜோசப்பிற்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

Baby SadhanaBalu MahendraJ Sathish KumarJSK Film CorporationM SasikumarNa MuthukumarRamSaabu JosephThalaimuraigalThangameengalVallinam