இன்று ஒரு படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது என்பதை பல்ஸ் பிடித்து பார்க்க உதவும் அளவுகோல் என்றால் அது யூ டியூப் இணையதளம் தான். அந்த வகையில் சந்தானம் கதைநாயகனாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ட்ரெய்லரை யூ டியூப்பில் பதிவிட்ட இந்த ஐந்து நாட்களில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
சந்தானம் முதன்முறையாக ஹீரோவாக நடிப்பது, ஒப்பனிங் பாடல் மற்றும் டான்ஸ், குறிப்பாக ராஜமௌலி இயக்கிய தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் தான் இத்தனை பேர் இந்த ட்ரெய்லரை பார்க்க காரணம். நகைச்சுவை நடிகரான ஸ்ரீநாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.