‘அஞ்சான்’ பற்றிய அஞ்சு சுவராஸ்யங்கள்..!


1. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படம் இது. லிங்குசாமி இயக்கும் முதல் டபுள் ஆக்ஷன் படமும் கூட..

2. இந்தப்படத்தில் “சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி..சில்க்ஸ்மிதா கம்யூனிட்டி” என்ற பாடலை எழுதியுள்ளார் விவேகா. க்ளைமாக்ஸில் இடம்பெறும் பாடலில் இந்தி நடிகை சித்ரங்கதா சிங் ஆடியிருக்கிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா..? ஜஸ்ட்.. ஒரு கோடி ரூபாய்தான்.,

3. இந்தப்பாடலுக்கான செட் அமைப்பிற்கும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மும்பையில் பிரமாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டது..

4. இந்தப்பாடலில் சூர்யா இருக்கிறாரே தவிர, சித்ரங்கதா சிங்குடன் சேர்ந்து நடனம் ஆடவில்லை. அவருடன் ஆடியிருப்பவர் வில்லன் நடிகரான மனோஜ் பாஜ்பாய் தான்.

5. இந்தப்படத்தை சுதந்திர தின வெளியீடாக ஆகஸ்ட்-15ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. சூர்யாவின் இதற்கு முந்தைய படமான சிங்கம்-2 கடந்த வருடம் ஜூலை-4ல் வெளியானது

AnjaanG DhananjeyanN LingusamyN Subash Chandra BosePeralaganSamanthaSantosh ShivanSooriSuriyaThirrupathi BrothersUTV Motion PicturesVaranamayiramVelVivekaYuvan Shankar Raja