‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் டப்பிங் பேசிவருகிறார் விஜய். வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய போர்ஷனுக்கு 48 மணிநேரத்துக்குள் டப்பிங் பேசிவிடுவது விஜய்யின் வழக்கம். அந்த வகையில் பார்க்கும்போது அனேகமாக இன்றைக்குள் தனது டப்பிங்கை பேசி முடித்துவிடுவார் என்று தெரிகிறது.
‘ஜில்லா’வை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், எந்த ஒரு காரணத்தைக்கொண்டும் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கும் விஜய், படம் சம்பந்தமான மற்ற தொழில்நுட்ப வேலைகளிலும் தன் பார்வையை பதித்திருக்கிறார்.