‘465’ படத்தின் ஹீரோவானார் ‘ஆபீஸ்’ சீரியல் கார்த்திக்ராஜ்..!

விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக்ராஜ். இவர் தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார். இந்தப்படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ‘சாய் சத்யம்’ என்பவர் இயக்குகிறார்.

இவர் வேறு எந்த இயக்குனர்களின் உதவியும் இல்லாமல் தனியாக தன்னை ஒரு இயக்குனராக வளர்த்துக்கொண்டவர். நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “பிச்சைக்காரன்” மற்றும் “சைத்தான்” படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஜி.ராஜராஜன் தான் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

‘465’karthick rajகார்த்திக்ராஜ்