நேரம் பட வெற்றிக்கு பின்னர் தமிழ்சினிமா பக்கம் வராமல் மலையாளத்திலே பிசியாகிவிட்ட நிவின்பாலி இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார்.. இந்தப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இவர் மிஷ்கினிடம் முகமூடி படத்தில் உதவி இயக்குனராகவும் செகண்ட் யூனிட் டைரக்டராகவும் வேலை பார்த்தவர். ஆனால் நிவின்பாலி நடிக்க இருக்கும் படத்துக்கான கதையை இவர் தயார் செய்யவில்லை. பதிலாகா கன்னடத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘உளிடவரு கண்டந்தே’ படத்தை தான் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பல விருதுகளையும் குவித்த படம் தான்.. ஆனால் தான் தமிழுக்கு மீண்டும் வருவதால் கவனமாக அடியெடுத்து வைக்க விரும்பியுள்ளார் நிவின்பாலி. இதற்காகவே அந்த ஸ்கிரிப்ட்டை 40 முறை திருத்தி எழுதியுள்ளார் இயக்குனர்.. கடைசியாக நிவின்பாலி ஒகே சொன்னபின் தான் ஸ்க்ரிப்ட்டே பினால் ஆனது.. நிவின்பாலியின் வெற்றி ரகசியம் அவர் ஒவ்வொரு ஸ்கிரிப்ட் உருவாக்கத்திலும் இயக்குனருடன் கடைசி வரை பயணிப்பது தான் என அவரது நண்பரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் சொன்னது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா..?