50வது நாளில் அடியெடுத்து வைத்த ‘ராசாத்தி’..!

மலையாளத்தில் இருந்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, தமிழுக்கு ரீமேக் செய்யப்பட நல்ல படங்கள் கூட சரிவர ஓடாத ஒரு அபாயகரமான சூழ்நிலையில் வெளியாகி, அந்த மாயையை அடித்து நொறுக்கி இன்று 50வது நாளை தொட்டுள்ளது ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ படம்.

எந்த மொழிக்கும் அழகாக பொருந்தக்கூடிய இந்த கதை இங்கே தமிழில் வெற்றிபெற்றதற்கு இரண்டே பேர்தான் மிக முக்கிய காரணம்.. ஒருவர் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக திரைக்கதை அமைத்து இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. மற்றவர் படத்தில் வசந்தி என்கிற அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த எவர்கிரீன் ஏஞ்சல் ஜோதிகா தான்.

இந்தப்படம் வெளியான பின்பு, அடுக்களையை விட்டே வெளியே வராத பெண்களும், கிணற்றுத் தவளையாய் வீடே கதி என அடைந்து கிடந்த பெண்களும் தங்களுக்கென ஒரு தனி கனவு, உலகம் இருக்கிறது, அதற்காகவும் வாழவேண்டும் என்கிற ஊக்கத்தை, தாக்கத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தியதுதான் இந்தப்படம் இன்று 50வது நாளை தொட காரணம். அதுதான் இந்தப்படத்தின் உண்மையான வெற்றியும் கூட.

36 வயதினிலேஜோதிகாரோஷன் ஆண்ட்ரூஸ்வசந்தி