‘36 வயதினிலே’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்…!

36 வயதுடன் பெண்களின் கனவுகள் முடிந்துவிடுவதில்லை. அதற்குப்பின் தான் அவர்களுக்கென வாழும் வாழ்க்கை தொடங்குகிறது”.. இந்த கருத்தை இன்றுள்ள குடும்பத்தலைவிகளிடம் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களும் இந்த வயதில் இருப்பவர்களோ அல்லது அதை கடந்து வந்தவர்களோ தானே..?

ஆக, ஜோதிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருவதற்கு இதைவிட அருமையான கதைக்கரு வேண்டுமா என்ன..? ‘36 வயதினிலே’ படமும் முழுக்க முழுக்க குடும்பத்தினருக்கான படம் தான். குறிப்பாக கணவன்மார்களும், டீனேஜ் குழந்தைகளும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

அதனால் தான் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வரும் மேமாதம் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் ‘2டி’ தயாரிப்பில், ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர்ஹிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2டி36 வயதினிலேசந்தோஷ் நாராயணன்சூர்யாஜோதிகாரோஷன் ஆண்ட்ரூஸ்