மார்ச்-28ல் ரிலீஸாகும் ‘இனம்’… திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது..!


இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். பலமுறை தேசிய விருதுகளால் தன் கேமராவை அலங்கரித்தவர். காட்சிகளை பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்டும் வல்லமை படைத்த இவர் அவ்வப்போது சில படங்களையும் இயக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்.

அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் ‘உருமி’ய இவர், தற்போது இவர் இயக்கியிருக்கும் படம் தான் ‘இனம்’. இந்தப்படம் வரும் மார்ச்-28ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது..

இலங்கை பிரச்சனையை பற்றிய படமா என்று சந்தோஷ் சிவனிடம் கேட்டால், “ஒரு சின்ன திருத்தம். இலங்கை பிரச்னையை கையில எடுக்கவில்லை. போருக்கு பின்னால் மனிதர்களின் குறிப்பாக குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்ங்றது தான் ‘இனம்’. இந்தப்படத்துக்காக ஈழத் தமிழர்களை எடுத்துக்கிட்டேன். ஆனால் இது எல்லா நாட்டின் யுத்தங்களுக்கும் பொருந்தும்.

அதோட நம்ம கண்ணு முன்னால நடந்த ஒரு விஷயத்தை நம் சொந்தங்களோட விஷயத்தை நாம சொல்லாம வேறு யார் சொல்வாங்க” என்கிறார்.

InamN LingusamyN Subash Chandra BoseSantosh SivanSarithaThirrupathi BrothersUrumi
Comments (1)
Add Comment
  • altogel

    813830 528322The leading source for trustworthy and timely health and medical news and info. 74074