ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் 28 தான்..!

கோச்சடையானும் விஸ்வரூபம்-2வும் இதோ, அதோ என ரிலீஸாகாமல் இழுத்தடிப்பதால் ரஜினியும் கமலும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களோ என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது. சின்னப்படங்களே விதம்விதமான பிரச்சனைகலை சந்திக்கும்போது பெரியபடங்களின் நிலை பற்றிசொல்லவா வேண்டும்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருக்கவேண்டிய ‘வல்லினம்’, இதோ இந்த வார இறுதியில்தான் வெளியாகிறது. இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளர் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான். ஆனால் படம் வர தாமதமாயிற்றே.

அதனால் ரஜினி, கமல் மட்டுமே அவர்கள் படம் வெளிவருவதை தீர்மானித்துவிட முடியாது. அதை கணக்கில் கொண்டுதான் கோச்சடையானை ஏப்ரல்-11ஆம் தேதி வெளியிட முடிவு செய்து மாற்றம் இல்லாத இறுதி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

அதேபோல கமலின் ‘விஸ்வரூபம்-2’வும் மே-9ஆம் தேதி வெளியாவது உறுதியென்றே சில தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையே 28 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த இரண்டு படங்களையும் தவறாது பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான இந்த இடைவெளி.

மேலும் கோடைவிடுமுறை என்பதால் இந்த தேதிகளில் இனி மாற்றம் இருக்கது என்றே தெரிகிறது.

Kamal HasanKoochadaiyanRajinikanthViswaroopamViswaroopam 2
Comments (1)
Add Comment
  • สล็อตเงินวอน

    48792 205594great post, really informative. I wonder why the other experts of this sector do not notice this. You ought to continue your writing. Im positive, youve a terrific readers base already! 336325