14 விருதுகளை அள்ளிய ‘பாக் மில்கா பாக்’

பிரபல விளையாட்டு வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்திப்படம் தான் ‘பாக் மில்கா பாக்’. இந்தப்படத்தில் ஃபர்ஹான் அக்தர் ஹீரோவாக நடிக்க, சோனம் கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். நேற்று ஃபுளோரிடாவில் நடைபெற்ற 2014ஆம் ஆண்டிற்கான IIFA விருது வழங்கும் விழாவில் இந்தப்படம் 14 விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த நடிகர், இயக்குனர் ஆகியவற்றுடன் சவுண்ட் மிக்ஸிங், மேக்-அப் உட்பட பல தொழில்நுட்ப பிரிவுகளையும் சேர்த்து 14 விருதுகளை கைப்பற்றியுள்ளது. இதுதவிர பாலிவுட்டின் சிறந்த அறிமுக நடிகராக ‘ராஞ்சனா’வில் நடித்த தனுஷும் விருதுபெற்று நமது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

bhaag milkha bhaagFarhan AkhtarSonam Kapoorஃபர்ஹான் அக்தர்சோனம் கபூர்பாக் மில்கா பாக்ராஞ்சனா