அதிர்ச்சியில் ‘10 எண்றதுக்குள்ள’ டீம்..!

விக்ரமை வைத்து தற்போது விஜய் மில்டன் இயக்கிவரும் ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரோடு மூவி எனப்படும் பயணக்கதை என்பதால், பலவிதமான லொக்கேஷன்களில் படப்படிப்பு நடத்தி வந்தார்கள்.. அந்தவகையில் கடந்த மாதம் நேபாளத்திலும் பட்டப்படிப்பை நடத்திவிட்டு வந்தார்கள்.. காரணம் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சமந்தா, ஒரு கேரக்டரில் நேபாளி பெண்ணாக நடிக்கிறார்.

தற்போது சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளமும் பாதிப்புக்குள்ளானது. அதிலும் குறிப்பாக ‘1௦ எண்றதுக்குள்ள’ குழுவினர் நேபாளத்தில் ஷூட்டிங் நடத்திய இடத்தில் உள்ளவர்களும் இந்த நிலநடுக்க தாக்குதலுக்கு தப்பிக்கவில்லை. அங்கே படப்பிடிப்பு நடத்தியபோது இந்த குழுவினருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்களாம் அந்த நேபாள கிராமங்களின் மக்கள்.

இத நிலநடுக்கம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனே, நேபாளத்தில் தங்களுக்கு உதவிய நபர்கள், மாறும் தொடர்பில் இருந்தவர்களுக்கு போன் செய்து விசாரிக்க முயற்சி செய்தபோது பலபேரின் செல்போன்கள் தொடர்புகொள்ளமுடியாத நிலையில் இருந்ததாம். சில நாட்களுக்கு முன்புதான், தாங்கள் சந்தித்து பழகிய மக்களுக்கு இப்படி நடந்துவிட்டதே என அதிர்ச்சியில் உறைந்துள்ளது 1௦ எண்றதுக்குள்ள’ டீம்.

10 எண்றதுக்குள்ளசமந்தாவிஜய் மில்டன்